
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா.. அந்தவகையில் மாயா படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படம் டோரா. இந்த படத்தை தாஸ்ராமசாமி இயக்கியுள்ளார்.
நயன்தாராவின் தந்தையாக தம்பி ராமைய்யா நடித்துள்ள இந்த படத்தில் ஹரிஸ் உத்தமன் உள்பட சிலர் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் பவளக்கொடி என்ற அந்த வேடத்தில் நயன்தாரா அந்த வேடத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளாராம். அதோடு, சில நாட்களுக்கு முன்பு இந்த படத்திற்கான டப்பிங் பேச வந்த நயன்தாரா, தனக்கான மொத்த டயலாக்கையும் ஒரே நாளில் பேசி முடித்து விட்டாராம்.
குறிப்பாக, கேப் விட்டு பேசினால் பேசும் மாடுலேஷன் மாறக்கூடும் என்பதற்காக, மதியம் சாப்பிடகேகூட டப்பிங் தியேட்டரை விட்டு வெளியேறாமல், மைக் முன்பு நின்றபடி சாப்பிட்டுக்கொண்டே அதே பீலில் பேசி முடித்தாராம் நயன்தாரா


