ஓ.பன்னீர்செல்வத்தை தமிழராக மட்டுமே பார்க்க வேண்டும் – வலியுறுத்தும் ஜி.கே.நாகராஜ்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிராக கொங்குநாடு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.நாகராஜ் அறிக்கை விட்டுள்ளார். அவருடைய அறிக்கையில்,

இன்று(08.12.201a6) காலை அவுட்லுக்(OUTLOOK) பத்திரிக்கைக்காக தொலைபேசியில் பேட்டிகண்ட பெண் நிருபர், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் முதலமைச்சராகி இருக்கிறார்.மேலும் அந்த சமுதாயத்தைச் சார்ந்த சிலர் அதிமுகவின் பொதுச்செயலாளராக முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

கொங்குமண்டலத்தில் கவுண்டர் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்தும் உங்கள் கருத்து என்ன?என்று கேள்வி எழுப்பினார். மேலும் சில பத்திரிக்கைகள் இதை பெரிதுபடுத்தி தமிழர்களுக்குள் சிண்டு முடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

50 ஆண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிடக்கட்சியில் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எவ்வித நிர்பந்தமுமின்றி, யாருக்கும் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டி காத்திருக்காமல் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.முன்னாள் முதல்வரின் இறப்பு என்கிற துயர சம்பவத்தால் அவர் பதவியேற்றுக்கொண்டாலும்,50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் எவ்வித நிபந்தனையுமின்றி ஒரு தமிழர் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.அவரை தமிழராக மட்டுமே பார்க்க வேண்டும்.அவர் பிறந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக அவரை பார்க்கக்கூடாது.

அண்டைமாநிலம் ஆந்திரா,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் ஆட்சி புரிந்து வருகிறார்கள்.50 ஆண்டு காலத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு முதன்முறையாக அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.மேற்கு மண்டலத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு எனது பதில், மண்ணின் மகத்துவம் புரிந்த மறத்தமிழனுக்கு மேற்கு மண்டலத்தையும்,வடக்கு மண்டலத்தையும் அங்கீகரிக்கத் தெரியும்.

ஒவ்வொரு சமுதாயத்தையும் அங்கீகரித்தால் மட்டுமே ஆட்சி தொடரும் என்பதும்,50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அனுபவம் பெற்றவர்களுக்கு நன்கு புரியும்.தமிழகத்தை தமிழன் ஆளுவதும்,ஒவ்வொரு தமிழனுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை ஒரு தமிழன் முடிவு செய்வான் என்பது நமக்கு பெருமை தானே.

50 ஆண்டுகால திராவிட கலாச்சார அரசியலில் மீண்டும் தமிழகத்தின் பெருமை ஒரு தமிழனால் தலை நிமிரும் என்று நம்பிக்கை வைப்போம்.இந்த முறை மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தயக்கமின்றி முதலமைச்சருக்குரிய இருக்கையில் அமர்ந்து ஆட்சிபுரிய கொங்குநாடு ஜனநாயக கட்சியின்(KJK) மனமார்ந்த வாழ்த்துக்கள்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response