மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் நயன்தாராவின் ‘அறம்’ ..!


மெட்ராஸ், கத்தி படங்கள் வெளியானபோது அது என்னுடைய கதை என வழக்கு தொடுத்தவர் தான் மீஞ்சூர் கோபி என்கிற கோபி நயினார். தற்போது கோபி நயினார் இயக்கிவரும் படத்தில் கதையின் நாயகியாக கலெக்டர் வேடத்தில் நடித்துவருகிறார். இதுநாள்வரை டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பை நடத்திவந்தார்கள்.,

தற்போது இந்தப்படத்திற்கு ‘அறம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.. படத்தில் நியாயத்திற்காக, அநீதிக்கு எதிராக போராடும் கலெக்டர் வேடத்தில் நயன்தார நடித்துள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படம், நயன்தாராவின் 55வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response