எதிர்பார்த்ததே நடந்தது ; அட்லி டைரக்சனில் மீண்டும் விஜய்..!


தெறி’ படத்தின் வெற்றியை(!?) தொடர்ந்து மீண்டும் அட்லி டைரக்சனில் விஜய் நடிபார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ற மாதிரி அட்லயும் வேறு யாரிடமும் கதை சொல்லாமல் மவுனம் காத்துவந்தார். இந்தநிலையில் மீண்டும் விஜய்-அட்லி கூட்டணி இணைகிறது என்கிற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளது. இயக்குனர் அட்லியும் ‘ஒன்ஸ் அகெய்ன் விஜய் அண்ணா” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.. மற்ற நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.

Leave a Response