‘மெலடி கிங்’ வித்யாசாகருக்கு மீண்டும் வாசல் திறந்த ‘திருட்டுப்பயலே-2’..!


பத்து வருடங்களுக்கு முன்புவரை தமிழ்த்திரையுலகில் கொடிகட்டி பறந்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர். அர்ஜுனின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்த வித்யாசாகர், ரஜினி நடித்த ‘சந்திரமுகி’க்கு கொடுத்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது வரலாறு.. குறிப்பாக ‘ரா ரா’ பாடலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியுமா என்ன.?

ஆனாலும் தலைமுறை மாற்றத்தால் தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்ட வித்யாசாகரை மலையாள திரையுலகம் மட்டும் கணிசமாக பயன்படுத்தி வருகிறது. இப்போது இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘திருட்டுப்பயலே 2’ படத்துக்கு இசையமைப்பதான் மூலம் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் வித்யாசாகர்..

பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் இணைந்து நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டிலேயே படமாக்கப்படும் என்றும் இயக்குனர் சசி கணேசன் கூறியுள்ளார்., இப்படத்துக்கு மிகவும் அழுத்தமான மெலடி பாடல் டிராக் தேவை என கருதிய காரணத்தால், ‘மெலடி கிங்’ வித்யாசாகரை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக இயக்குனர் சசி கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Response