சூர்யா – செல்வராகவன் அதிரடி கூட்டணி..!


கடந்த சில மாதங்களாகவே விஜய்யை வைத்து செல்வராகவன் படம் இயக்கப்போவதாக ஊடகங்களில் செய்தி அடிபட்டுக்கொண்டிருந்தது.. ஆனால் இப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென சூர்யா நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கப்போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்கிற பிரமாண்டமான படத்தை இயக்கியவர்தான் செல்வராகவன்.. தம்பியை இயக்கியவர்கள் அண்ணன் படத்தை இயக்குவதுதானே முறை.. இது சூர்யாவின் 36வது படம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும் இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்..

Leave a Response