
சந்தானத்துடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தவர்தான் டாக்டர் சேது.. அந்தப்படத்தில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து மீண்டும் ‘வாலிபராஜா’ என்கிற படத்திலும் இருவரும் கூட்டணி சேர்ந்து நடித்தனர்.. இதனால் இவர்களது நட்பு இறுகியது..
இந்தநிலையில் கிருஷ்ண சாய் என்பவர் இயக்கத்தில் ‘ஆளுக்கு பாதி 50-50’ என்கிற படத்தில் சேது நாயகனாக நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாக நடித்திருக்கிறார். லிபி சினி கிராப்ட்ஸ் ரஞ்சித் குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சேதுவின் நட்புக்கு பெருமை செய்யும் விதமாக நடிகர் சந்தானம் வெளியிட்டார்.


