“பூர்ணாவை நான் தாயாகவே பார்க்கிறேன்” ; மிஷ்கின்


இனி பூர்ணாவின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என அனைவரும் நினைத்த நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்து ஆசுவாசப்படுத்தியது.. படத்தை இயக்கியிருப்பது மிஷ்கினின் தம்பி ஆதித்யா தான் என்றாலும், கதை, வசனம் எல்லாம் மிஷ்கின் தான் என்பதால் இது மிஷ்கின் படமாகவே கருதப்படுகிறது..

இயக்குனர் ராம் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக மிஷ்கினே நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக கதாநாயகி தேடி அலைந்த மிஷ்கினுக்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன.. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, மேலும் கர்ப்பிணி என்கிற அம்சங்கள் இருந்தால் இன்றைய கதாநாயகிகள் யார்தான் ஒப்புக்கொள்வார்கள்.. ஆனால் தைரியாமாக ஒப்புக்கொண்டு நடித்துள்ளார் பூர்ணா.

இந்த கோபமும் பூர்ணாவின் மீதான பாராட்டும் ‘சவரக்கத்தி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கினின் பேச்சில் வெளிப்பட்டது.. “பல ஹீரோயின்கள் மரியாதையாக வரவேற்று உட்காரவைத்து கதை கேட்டார்கள்.. ஆனால் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயா, அதிலும் இப்போது கர்ப்பிணி வேறா என கேரக்டரை கேட்டதும் “ஸாரி சார்.. என் இமேஜ் போயிடும்” என பின்வாங்கிவிட்டார்கள்..

அப்புறம் தான் பூர்ணாவை பார்த்தோம்.. அதற்கு முன் அவர் நடித்த படங்கள் எல்லாம் ‘லொத்த’ படங்கள் தான்.. ஆனால் பூர்ணாவின் நடிப்பு அபாரமாக இருந்தது.. நாங்கள் கதை சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார்.. அதுமட்டுமல்ல, இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி, மலயாளி பெண்ணான அவர் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு தானே டப்பிங்கும் பேசியுள்ளார். இப்படி சொல்வதால் உடனே அவருக்கும் எனக்கும் ஏதோ இது என நினைக்கவேண்டாம். அவரை நான் என் தாயாகவே பார்க்கிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினார் மிஷ்கின்.

Leave a Response