தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் உன்ன நெனச்சு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது நீங்க முடியுமா என்கிற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
இவ்விரு பாடல்களையுமே கபிலன் எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.நேற்று பாடல் வெளியானதில் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கபிலனின் வரிகளும் சித்ஸ்ரீராமின் குரலில் ரசிகர்களை மயக்கிவருகிறது.
நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் ஆறுமா
உயிர் போகும் நாள் வரை
உனை தேடுவேன்
வீசும் தென்றல் என்னை விட்டு விலகிப் போகுமோ
போன தென்றல்
என்று எந்தன் சுவாசமாகுமோ
போன்ற வரிகளின் காதல் வலியைப் பிழிந்து கொடுக்கின்றன.
இதனால் இந்தப்பாடலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இளையராஜா கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணியில் உருவாகி வெளியான இரண்டு பாடல்களுக்கும் பெரும் வரவேற்புப் பெற்றிருப்பதால் சைக்கோ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
நீங்க முடியுமா பாடல் கேட்க….