ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அது இணையதளத்தில் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தில் பட தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பயப்படும் ஒரு இணையதளமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் தயாரிப்பில், அவரது தம்பி ஆதித்யா இயக்கி உள்ள படம் சவரக்கத்தி. இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுக்கொள்ள தானே அனுமதிப்பதாக மிஸ்கின் கூறியுள்ளார் இந்த படத்தால் தனக்கு ஒரு பைசா வராது. படத்தின் லாபமும் தனக்கு தேவையில்லை.. தமிழ் ராக்கர்ஸும் ரிலீஸ் பண்ணுங்க. அவரவர் அவரவர் வேலையை பார்ப்போம் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
அதோடு, “இந்த படத்தில் நடிக்க மறுத்த அந்த 4 பெரிய நடிகைகளுக்கு ஒரு பெரிய கும்புடு. அவர்கள் நடித்திருந்தால் படம் குட்டிச்சுவரா போயிருக்கும். என் பட வெற்றிக்கு 90% பூர்ணா தான் காரணம். அவரே தமிழில் டப்பிங் பேசியுள்ளார்” என பூர்ணாவையும் பாராட்டியுள்ளார் மிஷ்கின்..