ஒரு நீண்ட இடைவெளிவிட்டு ஒதுங்கியிருந்த ‘மச்சான்ஸ்’ நமீதாவுக்கு நிச்சயமாக அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்பதற்கான அறிகுறி தெரிந்துவிட்டது.. தனது உடலின் 20 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாகியுள்ள நமீதாவுக்கு ஜாக்பாட் பரிசாக மோகன்லாலின் ‘புலி முருகன்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் வெளியான ‘புலி முருகன்’ படம் சூப்பர்ஹிட்டானதுடன், அதில் நடித்த நமீதாவுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. “ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள். புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே மோகன்லாலுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?” என்கிறார் நமீதா சந்தோஷமாக.