
இதுநாள் வரை ஹீரோக்களுக்கு மட்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே இரண்டுவிதமாக க்ளைமாக்ஸ் வைப்பார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அதாவது கதைப்படி சோக முடிவை வைத்து அதை ரசிகர்கள் ஏற்காவிட்டால் படத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்பதால் சந்தோஷமான க்ளைமாக்ஸ் ஒன்றையும் எடுத்து வைத்துக்கொள்வார்கள்..
இன்னும் சில இயக்குனர்கள் ஒரே படத்தை இரண்டு மொழிகளில் எடுக்கும்போது இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற மாதிரி, அல்லது அதில் நடிக்கும் இரண்டு மொழி ஹீரோக்களுக்காக தனித்தனி க்ளைமாக்ஸ் வைபதுண்டு.. ஆனால் முதன்முறையாக ஒரு காமெடி நடிகருக்காக இரண்டு க்ளைமாக்ஸ் உருவாக்கப்பட்டது என்றால் அது நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்காகத்தான்..
ஆம்.. ரெமோ’ படத்தில் பெண் வேடமிட்டு நர்ஸாக வரும் சிவகார்த்திகேயனை உண்மையிலேயே பெண் என்று நம்பி, அவரை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு லவ் டார்ச்சர் கொடுப்பார் அந்த ஏரியாவை சேர்ந்த யோகிபாபு.. கிளைமாக்ஸில் கீர்த்தி சுரேஷுக்கு உண்மை தெரிந்ததும் அந்த பெண் வேடத்துக்கு வேலையில்லாமல் போய்விடும்..
ஆனால் யோகிபாபு மட்டும் கையில் ரெமோ நர்ஸ் போட்டோவை வைத்துக்கொண்டு அனைவரிடமும் காட்டி இவளை பார்த்தீர்களா என கேட்டுக்கொண்டு இருப்பதாக முடித்திருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் யோகிபாபுவுக்கான கிளைமாக்ஸை வேறுமாதிரித்தான் எழுதியிருந்தாராம்..
அதாவது கீர்த்தி சுரேஷுக்காக திருமண புடவை எடுக்க, துணிக்கடைக்கு பெண் வேடத்தில் செல்லும் சிவகார்த்திகேயன், அங்கே ஏதேச்சையாக வரும் யோகிபாபுவை ட்ரஸ்ஸிங் ரூமுக்குள் அழைத்துச்சென்று தான் பெண் அல்ல என்கிற உண்மையை வெளிப்படுத்துவாராம். அதைக்கண்டு திக்பிரம்மையுடன் யோகிபாபு புலம்பிக்கொண்டு போவதாகத்தான் காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம்..
ஆனால் எதற்கும் பின்னாளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக யோகிபாபு கேரக்டர், தனது காதலியை தேடுவதாக காட்சியை மாற்றிவிட்டாராம் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.


