
சரசுவதி பூசை கொண்டாடப்படும் நாளில் தமிழாசிரியர் செந்தலைகவுதமன் எழுதிய பதிவு
கையில் வீணையோடு கல்விக்கடவுள் கலைமகள் (சரசுவதி / பாரதி) காட்சியளிக்கிறார். வீணைக்கு வயது முந்நூறு! முந்நூறாண்டுகளுக்கு முன்பு யாழ் இருந்தது ; இன்றைய வடிவில் உள்ள வீணை இல்லை.
அப்போது எந்த இசைக்கருவியை ஏந்தியிருந்தாரோ?கல்விக்கான கடவுள் பிற நாடுகளிலும் உண்டு.கிரேக்கர்களின் கல்விக்கடவுள் மினர்வா!
சிலை வணக்கம் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டு கடந்துவிட்டது. சிலைவடிவக் கடவுள்களை அருங்காட்சியகங் (மியூசியங்) களில் மட்டுமே அயல்நாடுகளில் பார்க்க முடியும்.
கடவுளாக ஒருகாலத்தில் வணங்கப்பட்டு, இன்று வெறும்காட்சிப்பொருளாக நிற்கும் கடவுளர் வரலாற்றைப் பற்றி அறிஞர் அண்ணா
எழுதியுள்ளநூல் ‘மாஜி கடவுள்கள்’.
( தேவாரத்திலேயே ‘ மாசில் வீணையும்’ எனச் சொல் உண்டு. சிந்தாமணியிலும் வீணை உண்டு. இன்றைய வடிவத்தில்
உள்ள வீணை உருவானது நாயக்க மன்னர் காலத்தில் – முந்நூறாண்டுக்கு முன்பு – என்பதே வரலாறு தரும் செய்தி.
பகுத்தறிவாளர்கள் சிலைகளுக்கும் படங்களுக்கும் சிறப்பு செய்வது , அவற்றை வணங்கி வழிபட்டால் கல்வியும் செல்வமும் கொழிக்கும் எனும் எதிர்பார்ப்பு கருதி அல்ல!
இன்றுள்ள கடவுளர் உருவங்களோடு சமற்கிருத எழுத்துகளையும் ஆரிய அடிமைகள் இடையே நுழைத்திருப்பார்கள்!
தமிழர்கள் வணங்கிக் கொண்டிருப்பது சாமியை மட்டுமல்ல , சமற்கிருத மொழியையும் சேர்த்துத்தான்!


