ரஜினிக்கு தொந்தரவு கொடுக்காமல் லொக்கேசனை மாற்றிய அஜித்…!


அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘ஏ.கே-57’ படத்தில் (அதாங்க.. அஜித்குமார் 57வது படம்) நடித்து வருகிறார்.. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்று முடிந்தது.. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே செட் போட்டு படமாக்க முடிவுசெய்தனர்.. அதன்படி சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் செட்டிற்கான அனுமதியை பெறச்சென்ற இயக்குனர் சிவாவுக்கு அதே ஸ்டுடியோவின் இன்னொரு தளத்தில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வருவது தெரிய வந்ததாம்..

இதனால் தயங்கிய சிவா, எதற்கும் அஜித்திடம் கேட்டு விடுவோம் என விஷயத்தை அஜித்திடம் கொண்டு சென்றாராம்.. இதைக்கேட்ட அஜித் நாம் வேறு இடம் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டாராம். காரணம் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அருகருகே நடந்தால் அது இருவரின் படங்களுக்கான பிரைவசியை பாதிக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் தனது படத்தால் ரஜினிக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு உண்டாகிவிடக்கூடாது என்பதாலும் தான் அஜித் இந்த முடிவெடுத்தாராம். தற்போது ஐதராபாத்தில் செட் போட்டு அஜித் படத்தின் ஷூட்டிங்கை நடத்த முடிவுசெய்துள்ளனராம்.

Leave a Response