பாரதிராஜா-விதார்த் இணைந்த ‘குரங்கு பொம்மை’..!


குற்றமே தண்டனை’ படத்தில் விதார்த்தின் நடிப்பு ரொம்பவே பாராட்டப்படுகிறது.. இதைத்தொடர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இணைந்து விதார்த் நடித்துள்ள படம் ‘குரங்கு பொம்மை’. ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம், அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறதாம். இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் விதார்த் ஜோடியாக மலையாள நடிகை டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ரமாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறாராம் நித்திலன்.

இதில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். சென்னையை சுற்றியே நகரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்துள்ளதாம்.. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை மாலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

Leave a Response