‘கயல்’ படத்தை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து படம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்ட பிரபுசாலமன், தனுஷ்-கீர்த்தி சுரேஷ் என மெகா கூட்டணி அமைத்து இயக்கியுள்ள படம் தான் ‘தொடரி’.. முழுக்க முழுக்க ரயிலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் தான் இசையமைத்துள்ளார்..
படம் தயாராகியும் நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது.. காரணம் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் கொஞ்சம் கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டு விட்டன. இப்போது முழுப்படமும் முடிந்துவிட்டது..
இந்தப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் படத்தை வரும் செப்-22ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.