இந்திய அரசே, தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி பகல் கொள்ளையில் செயல்படுகின்ற திருமங்கலம் சுங்கச்சாவடியை இழுத்து மூடு, என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 29.08.2016 காலை 8 மணிக்கு நாம்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மதுரை மற்றும் விருதுநகரிலிருந்தும் வந்து பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சொல்லிய செய்திகள் படி, திருமங்கலம் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வெற்றி என்று கொள்ளலாம்.
அவர்கள், போராட்டம் நடத்த வந்த நாம்தமிழர் கட்சியினரைக் கைதுசெய்ய முடியாமல் 35 நிமிடம் காவல்துறை திணறியதாகவும், அவ்வேளையில் சுங்கவரி கொடுக்காமல் சுங்கச்சாவடியை கடந்து பல வாகனங்கள் சென்றதாகவும் அந்த வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்கின்றனர்.
அதோடு, நாம்தமிழர் கட்சியினர் கொடுத்த துண்டறிக்கையை வாங்கிப் படித்த மக்கள் மகிழ்ச்சியடைந்து, முழக்கமிட்டு சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினருக்கு வாழ்த்துச் சொன்னார்களாம்.
பல திசைகளிலிருந்தும் முற்றுகையிட வந்த நாம்தமிழரை பார்த்து காவல்துறை என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றதாகவும் அந்நேரம்,
சுங்கச்சாவடி ஊழியர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததாகவும் சொல்கின்றனர்.
அதன்பின் நாம்தமிழர் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.