‘தோழா’ இயக்குனரின் அடுத்த ஹீரோ மகேஷ்பாபு தான்..!

 

கடந்த வருட இறுதியில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படமாகட்டும்.. அல்லது இந்த வருடத்தில் வெளியான ‘தோழா’ படமாகட்டும் இந்த இருமொழி படங்களையும் இயக்கியவர்கள் தெலுங்கு இயக்குனர்கள் தான்.. ஆனால் இந்த இருவரில் இரண்டு மொழி ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் ‘தோழா’ பட இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி தான்.

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து நகைச்சுவையாகவும் அதேசமயம் படம் முழுதும் நெகிழ்ச்சியாகவும் கொண்டு சென்றிருந்தார் வம்சி.. ‘தோழா’வின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் இயக்க இருப்பது தெலுங்கு ஆக்சன் ஹீரோ மகேஷ்பாபுவைத்தான். இந்தப்படத்தை மகேஷ்பாபுவுக்கு ஏற்றமாதிரி ஆக்சன் படமாக இயக்குவாரா, இல்லை தோழா போல நெகிழ்ச்சியான படமாக இருக்குமா..? பார்க்கத்தானே போகிறோம்.

 

 

Leave a Response