கிழக்கு சீமையிலே ஞாபகங்களுக்கு திரும்பிய ராதிகா..!

 

இன்னொரு பாசமலர் என அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தான் 25 வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’. இந்தப்படத்தில் அண்ணன்-தங்கையாக பாசமலர்களாகவே மிக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருந்தனர் விஜயகுமாரும் ராதிகாவும்.. அதன்பின் விஜயகுமார் தொடர்ந்து பல கிராமத்து படங்களில் நடித்துவிட்டார்.

ஆனால் ராதிகாவுக்குத்தான் அதுபோல மண்மணம் சார்ந்த படம் ஒன்று அமையாமலேயே இருந்து வந்தது.. அது ராதிகாவுக்கும் பெரிய மனக்குறையாக இருந்துவந்து.. இப்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக அவர் நடித்துள்ள ‘தர்மதுரை’ படம் நீண்ட நாளைக்குப்பின்னர் அவரது ஏக்கத்தை தீர்த்து வைத்துள்ளது.

இந்தப்படத்தில் மீண்டும் யதார்த்தமான கிராமத்து பெண்மணியாகவே நடித்துள்ளாராம் ராதிகா. யாருக்கும் அடங்காத காளையாக திரியும் ஆக்ரோஷமான இளைஞனான விஜய்சேதுபதி தாயின் சொல் கேட்டால் மட்டும் பசுபோல சாதுவாகி விடுவாராம். இந்தப்படம் வெளியானபின் ராதிகாவின் நடிப்பு நீண்ட நாட்கள் பேசப்படும் என்று படக்குழுவினர் பேசிக்கொள்கிறார்கள்.

 

 

Leave a Response