சூழ்நிலை பாதகமானதால் இறங்கி வந்தார் சிம்பு..!

 

சின்ன வயதிலேயே அளவுக்கு மீறிய புகழுக்கு ஆளானதாலோ என்னவோ, சிம்புவுக்கு தான் செய்யும் தொழிலின் மீது பிடிப்பில்லாமல் போனதுதான் உண்மை.. அவர் நடிக்கும் படங்களில் ஒரு சில வேண்டுமானால் பைனான்ஸ் பிரச்சனையால் இடையில் நின்றிருக்கலாம்.. அல்லது தயாராகியும் ரிலீசாகாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அவர் சரியான நேரத்திற்கு நடிக்க வராததால் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாகத்தான் அவரது பல படங்கள் ரிலீசாகாமல் இழுத்தடிக்கின்றன. அதுவே பைனான்ஸ் பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைந்துவிட்டன.

சிம்புவுக்கு பப்ளிசிட்டி மட்டும் இலவசமாக கிடைத்துவிடுகிறது.. ஆனால் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகாமல் இருந்தாலும், அப்படி வெளியான படங்கள் ஓடாமல் இருந்தாலும் திரையுலகமும் சரி.. அவரது ரசிகர்களும் சரி போகப்போக அவர் மீது சலிப்படைந்து விடுவார்கள்…

இருக்கும் புகழை தக்கவைக்கவும், வருமானத்தை பெருக்கவும் ஒரு ஹிட் படம் கொடுத்தேயாக வேண்டும் என்பது சிம்புவுக்கு இப்போது தான் புரிய ஆரம்பித்துள்ளது.. அதனால் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்துவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கடைசி நேர படபிடிப்பில் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆன சிம்பு, இப்போது இறங்கி வந்துள்ளாராம்.

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அருமையான பாடலான ‘தள்ளிப்போகாதே’ பாடலை சிம்பு பண்ணிய கெடுபிடியால் படத்தில் இருந்தே தூக்கி விடலாம் என நினைத்த கௌதம் மேனன், இப்போது சிம்பு இறங்கி வந்துள்ளபடியால் பாடல்காட்சியை விரைவாக படமாக்கி படத்திலும் இணைத்து விடும் முடிவோடு வேலைகளை துவங்கியுள்ளாராம்.

சிம்பு மாதிரியான நடிகனுக்கு இயக்குனர் கௌதம் மேனனின் படங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப்படம் உணர்த்தும் என நம்புவோம்.

 

 

Leave a Response