முழுக்க தெலுங்கிலேயே துண்டறிக்கை அடித்த அதிமுக வேட்பாளர் – இவர்களை என்ன செய்வது?

சென்னை,ஆவடி அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனுக்கு தொகுதியில் உள்ள தெலுங்கு பேசும் வாக்காளர்களை கவர தெலுங்கு மொழியிலேயே அதிமுக ஆட்சியின் புகழை விவரித்து துண்டறிக்கை அடித்துள்ளார்.

தமிழக எல்லைப் பகுதிகளில் பிறமொழிகளில் சுவரொட்டி அடிப்பார்கள். அதிமுகவினரின் புண்ணியத்தால் இப்போது தலைநகர் சென்னையிலேயே இப்படி தெலுங்கில் துண்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இவருக்குப் போட்டியாக மற்ற கட்சிகளும் இறங்கலாம். ஓட்டுக்காக மொழி இனம் உட்பட எல்லாவற்றையும் காட்டிக்கொடுக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்.

Leave a Response