
அதிமுக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக உள்ளது.
கூட்டணியில் சேரும்போதே, சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து டிடிவி பேசியிருக்கிறார்.அதற்கு, நீங்கள் கேட்கும் தொகுதிகளைத் தருகிறோம்.அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதை நம்பித்தான் கூட்டணியில் டிடிவி இணைந்தாராம்.
ஆனால்,தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக பல கட்டங்களாகப் பேச்சு நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இதனால், டிடிவி தினகரன், டெல்லி பாஜகவை தொடர்பு கொண்டு நாங்கள் கேட்கும் தொகுதிகளை நீங்கள்தான் வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிற்து.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில்…
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவை நம்பித்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே டிடிவி இணைந்தார்.தற்போது தொகுதிப் பங்கீட்டில் டிடிவி விரும்புவதைக் கொடுக்க எடப்பாடி தயாராக இல்லை.பாஜகவும் இதில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லி கைவிட்டுவிட்டது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.தேசிய சனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள், நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிட வேண்டும் என்ற நிலையை எடப்பாடியும் பாஜகவும் உருவாக்குகின்றனராம்.இதனால், டிடிவி கேட்கும் தொகுதிகள் கண்டிப்பாகக் கிடைக்காது என்கிற நிலை ஏற்பட்டுள்ளதாம்.பாஜகவும் அதிமுகவும் அமமுகவைக் கைவிட்டதுபோல் தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களையும் கைவிடும் நிலையில் டிடிவி தினகரன் இருக்கிறார்.அவரை நம்பி, குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த டிடிவி கட்சியினர் அதுநடக்காது என்பதால் இப்போது கடும் வருத்தத்தில் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுகளால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவினர் மீது டிடிவி.தினகரன் கடும்கோபத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


