ஈரான் தலைவர் கம்மேனி குறித்து டிரம்ப் சொல்வது உண்மையா? – பதற்றத்தில் உலகம்

அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்​ட​கால​மாக மறுத்து வரு​வதால், அதன் மீது தாக்​குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்​றத்தைக் கொண்டு வரு​வது​தான் தீர்வு என அமெரிக்க அதிபர் டரம்ப் முடிவு செய்​துள்​ளார். இதற்​காக அமெரிக்கப் போர்க்​கப்​பல்​கள் மத்​திய கிழக்கு பகு​திக்குச் செல்ல அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டிருந்​தார்.அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் 10 நாட்​களுக்​குள் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் மோச​மான
விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​தார்.

அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது பதில் தாக்​குதல் நடத்​து​வோம் என ஈரான் கூறியது.

ஐக்​கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்​தார், குவைத் மற்​றும் ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க முகாம்​களில் அமெரிக்க விமானப் படை​யின் போர் விமானங்​களும், சரக்கு விமானங்​களும் குவிக்​கப்​பட்​டன.

இதனால் உருவான போர்ப் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்​கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி
ஒப்​பந்​தத்தை இறுதி செய்யவும் ஓமன் வெளி​யுறவு அமைச்​சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடி​யாக அமெரிக்கா​வுக்குச் சென்​றார்.

ஈரான் மீது தாக்​குதல் நடத்​தக்​கூ​டாது என்று பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி உள்ளிட்ட ஐரோப்​பிய நாடுகளும் அமெரிக்​காவை தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன.

இந்தச் சூழலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் அமெரிக்க நேரப்​படி வெள்​ளிக்​கிழமை நள்​ளிர​வில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்​குதல் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென உத்​தர​விட்​டார்.

ஈரான் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய கிழக்​கில் உள்ள நட்புநாடு​களான சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம்,
கத்​தார், குவைத் உள்ளிட்ட நாடு​களுக்​கும் அமெரிக்க அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்​லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வும் மட்​டும் கலந்​தாலோ​சித்து ஈரான் மீது திடீர் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாக அமெரிக்க ஊடகங்​கள் தெரிவித்துள்​ளன.

இந்​நிலை​யில்தான், ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள அயத்துல்லா அலி காமேனி​யின் அலு​வல​கங்​கள், அதிபர் மசூத் பெஜஸ்​கி​யான் ஆகியோரது அலு​வல​கங்​கள், இல்​லங்​களைக் குறி​வைத்து இஸ்​ரேல், அமெரிக்கப் படைகள் நேற்று வான்தாக்​குதல் நடத்​தின.

இதில் ஈரான் தலைவர் காமேனி​யின் இல்​லம் அருகே பலத்த சேதம் ஏற்​பட்​டுள்​ளதை செயற்​கைக்கோள் படங்​கள் உறுதி செய்​தன.

ஈரான் மீது இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்​கப் படைகள் தாக்​குதல் நடத்​தி​யதும், ஈரான் பதில் தாக்​குதலில் இறங்​கியது. இஸ்​ரேல் நோக்கி ஈரான் தொலை​தூர ஏவு​கணை​களை வீசி​யது. இவற்றை இடைமறித்து அழிக்​கும்
நடவடிக்​கை​யில் இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்​கப் படைகள் ஈடு​பட்​டன.

இதனிடையே, “உலகின் தீவிர​வாத மைய​மாக ஈரான் உரு​வெடுத்து உள்​ளது.அண்​மை​யில் ஈரான் அரசுக்கு எதி​ராக போராடிய ஆயிரக்கணக்​கான மக்​களை அந்த நாட்டு இராணுவம் கொன்று குவித்​தது. அணு ஆயுதத் திட்​டத்தை கைவிட அந்த நாடு மறுக்​கிறது.அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்கு ஈரான் மிகப் பெரிய அச்​சுறுத்​தலாக நீடிக்​கிறது. இந்த அச்​சுறுத்​தலை முறியடிக்​கவே தற்​போது அந்த நாடு மீது தாக்​குதல் தொடுக்​கப்​பட்டு இருக்​கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கமேனியின் மரணம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் இதுவரை அதிகார்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இது உளவியல் போர் என்று மட்டும் கூறி கமேனி உயிருடன் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது.

திடீரென ஏற்பட்டிருக்கும் இந்தப் போரால், உலகின் பெரும்பாலான நாடுகளும், மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response