நமது எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள் – விஜய் மீது சீமான் கடும்தாக்கு

வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.அவர் பேசியதாவது….

அரை விழுக்காடு, ஒரு விழுக்காடு வாக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள்.எட்டுக்கும் மேற்பட்ட விழுக்காடு வாக்கு வைத்திருக்கும் என்னிடம் எத்தனை பேர் பேரம் பேசி இருப்பார்கள். அதற்கெல்லாம் விலை போகாதவன் நான். நமது எச்சிலில் தான் பல பேர் கட்சி நடத்தி வருகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று முதலில் சொன்னது நான் தான்.

கொடியைக் கூட வேறு வண்ணத்தில் வடிவமைக்க முடியவில்லை. அதே சிவப்பு, மஞ்சள் தான். தூய சக்தி, அதனால் என்ன? ஜனநாயகன் படத்திற்கு பிளாக் டிக்கெட் கிடையாது. எல்லோருக்கும் ஒரே டிக்கெட் தான் என்றால் அது தூய சக்தி. பிளாக்கில் டிக்கெட் விற்கிறது ஒரு கொடுமை.

வீர மக்களைப் படியுங்கள், வீரர்களைப் போற்றுங்கள். வீர வரலாற்றைப் படியுங்கள், அவர் பின்னாடி போங்கள். நடிகன் பின்னாடி சுத்தாதீங்க என பழனிபாபா என்ற புரட்சியாளர் கூறினார். நமது கட்சியில் இருந்து தான் சிலவற்றை சுவீகரித்துள்ளார். எது போற்றத்தக்கது, எது தூற்றத்தக்கது என்று தெரியாமல் தான் பல தற்குறி கூட்டம் தற்போது உலாவி வருகிறது.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response