சீமானை மிரட்டுகிறதா திமுக?

நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என ஒன்றிய அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

பாஜகவின் நிர்பந்தம் காரணமாக குறை சொல்வதற்கு வேறு காரணமில்லாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் ஆதரவாகப் பேசி வருகிறார்.
தமிழக ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பை அனைத்துக் கட்சியினரும் வரவேற்றுள்ள நிலையில் அதிமுக விழி பிதுங்கி என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக நிற்கிறது.

அதிமுக பாஜக கூட்டணிக்கான முயற்சியை அதிமுக எடுக்கிறதோ இல்லையோ பாஜக, அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுக ஒருபோதும் மிரட்டவில்லை. எந்த ஒரு இடத்திலும் சீமான் அப்படிச் சொல்லவில்லை. பாஜகவிற்கு தமிழ்நாட்டில் காலூன்ற ஆள் இல்லை என்பதற்காக சீமான் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நீட்தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்கிறார். அதற்கு காரணம் பாஜகவுடன் தங்களுக்குப் பகை வந்துவிடுமோ என்பதற்காக எடப்பாடி புறக்கணிப்பு செய்கின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response