சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்களா? இதையெல்லாம் கவனியுங்கள்

வீடு வாங்குவதற்கு யாருக்குதான் ஆசை இருக்காது என்கிறீர்களா?. ஆசை இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் கவனம். பல லட்சங்களை கொட்டி வீடு வாங்கும்போது நாம் உஷாராக இருக்க வேண்டும். எனவே வீடு வாங்குவதற்கு முன்பும், நிலம் வாங்குவதற்கு முன்பும் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து குடியிருப்பை வாங்குவதற்கு முன் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிவை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விவரங்கள் வருமாறு: காலிமனை குறித்து தெரிந்து கொள்ளுதல்: மனையை விற்பவரிடம் இருந்து அது குறித்து தெரிந்து கொள்ளுதல் முக்கிய கடமை.

சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி பெற்ற வரைபடம் மற்றும் விலை நிர்ணய சான்றையும் சரி பார்க்க வேண்டும். மேலும் இதர நகர பகுதியாக இருந்தால் நகராட்சியின் அனுமதி சான்றை கவனிக்கவும். சாலைகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சாலையோரம் மனை அமைந் திருந்தால், அது உள்ளூர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுமா என்பதை அறிய வேண்டும். சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப் பட்டு உள்ளனவா என்பது உட்பட மனைக்கான உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மனை வாங்கிய இடத்தில் வீடு கட்டிய பின் எதிர்காலத்தில் ஏதேனும் காரணங்களுக்காக வீடு இடிக்கப்படுதல் போன்ற பிரச்னை வராமல் சரியாக கையாள வேண்டும். கருத்தில் கொள்ள வேண்டியவை: கட்டுமான நிறுவனத்திடம் இருந்து வீடு வாங்குவதற்கு முன் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு முறையான வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளனவா என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கட்டுமானம் நிறுவனம் அனுமதி வாங்கியபடி குடியிருப்பை திட்டமிட்டு கட்டியுள்ளதா அல்லது ஏதேனும் விதி மீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய வேண்டும்.குடியிருப்பின் உண்மையான உரிமையாளர் மற்றும் அதன் பங்குதாரர்கள் குறித்து கேட்டறிய வேண்டும்.

நன்கு திட்டமிட்டு கட்டப்பட் டுள்ளனவா என்பதுடன், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் சிஎம்டிஏ முழுவதும் சோதனை செய்துவிட்டதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் மனையோ அல்லது வீடோ வாங்குவதற்கு முன் அது குறித்து சிஎம்டிஏவிடம் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் உட்பட தனக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கேட்டறிதல் மிகவும் முக்கியம்.

அதுமட்டுமின்றி வீடு அமைந்துள்ள பகுதி பற்றி நன்கு விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். நகராட்சி, கிராமப் பகுதியா, மாநகராட்சி பகுதியா, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி, பள்ளி, கல்லூரிகள் வசதி இப்படி அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் அப்பகுதியில் உள்ளதா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a Response