விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒன்றியம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.அதற்காக சென்னை வந்துள்ளார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
அவர், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைப் சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது….
முதல்முறையாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் விவிபாட் கொண்டு வரப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவிபாட் முறையில் செய்யப்பட உள்ள மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குப்பதிவின்போது விவிபாட் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு சட்டத்திற்குப் புறம்பானது. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்தல் ஆணையம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் புகார்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரியே நடவடிக்கை -எடுக்கும் வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தினாலும் திமுக சந்திக்கத் தயாராக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.