இது தமிழ்த் தேசிய விருது – கவிஞர் யுகபாரதி பெருமிதம்

17.1.2016 அன்று சென்னை பெரியார் திடலில்  தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் ஒரு பகுதி….

ஊடகத்தில் இருந்துகொண்டு, மக்கள் சிந்தனைகளை எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங் கெல்லாம் பயன்படுத்தவேண்டும் என்கிற ஒரு உள்ளார்ந்த எண் ணத்தோடுதான் இந்தத் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றாலும்கூட, இந்தப் பெரியார் திடலுக்கு வருவது என்பது எனக்குப் பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல, என்னுடைய ஆத்மார்த்த கடமை களில் ஒன்றாகக்கூட நான் கருதக்கூடியவன்.

எனவே, ஆசிரியர் அவர்களுக்கு இந்த விருதை வழங்கியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிக் கொள்ளவேண்டும். இந்த விழாவிற்கு என்னுடைய மனைவியும் வந்திருக்கிறார்கள். அவர் இங்கே வருவதற்கு முன்பாக என்னைப்பற்றி மேடையில் பேசுவீர்களா? என்று கேட்டார்கள். கண்டிப்பாக நான் உன்னைப்பற்றி பேசுகிறேன் என்று சொன்னேன்.

சரி, பெரியார் திடலுக்குச் சென்றால் என்ன கிடைக்கும்? என்று கேட்டார்கள். நான் மிக எளிமையான ஒரு பதிலைச் சொன்னேன். பெரியார் திடலுக்குச் சென்றால், உனக்கு விடுதலை கிடைக்கும்; உனக்கு உண்மை கிடைக்கும் என்றேன். என் மகள் கேட்டாள், அப்பா இது தேசிய விருதா? என்று கேட்டாள். ஆமாம், இது தேசிய விருதுதான்; தமிழ்த் தேசிய விருது என்று அவளுக்கும் பதில் சொல்லிவிட்டேன்.

என்னுடைய அம்மாவிற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதில் சொல்லிவிட்டேன். என்னுடைய தந் தையார் அவர்கள் இடதுசாரி இயக்கத்தில் பெரு விருப்பம் கொண்டு, ஏறக்குறைய அவர் வாழ்க்கை முழுவதும் அதற்காகவே செலவிட்டார். அவருடைய சிந்தனை களையெல்லாம், நான் பாடல் வரிகளில் இழப்பதற்கு எதுவுமில்லை என்று எழுதி எழுதி அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒத்த நொடியில்தான் என்கிற பாடல்களை நீங்கள் கேட்டீர்கள். நான் எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், பெரியாருடைய பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் எந்த அளவிற்கு அறிவார்த்தமான சிந்த னையை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். பொதுவாக எனக்கு ஆண்கள் கைதட்டுவதைவிட, பெண்கள் கைதட்டுவதுதான் பிடிக்கும். ஏனென்றால், அவர்களுடைய கைதட்டல்களுக்குத்தான் ஓசை அதிகம். ஆண்களுடைய கைதட்டல் என்பது வெறும் கைதட்டு, பெண்களுடைய கைதட்டல் என்பது வளையல் கைதட்டாகும். எனவே, அதற்கு ஓசை அதிகம்.

பொட்ட பிள்ளை தொட்டதும் கொட்டம் அடங்கி டுச்சே என்று எழுதியிருக்கிறீர்களே என்று என் மனைவி என்னிடம் கேட்டார்கள். பொட்டை என்றால் கண் இல்லை என்றுதானே அர்த் தம் என்றார்.

ஒரு வார்த்தைக்கு இப்படியும் பொருள் கொள்ள முடியும் என்பதை எதார்த்தமாக அவர் கேட்ட அந்த வாக்கியத்திலிருந்து நான் புரிந்துகொண்டேன். பொட்டை என்கிற அந்த சொல்லை – கதாபாத்திரம் கண் தெரியாத ஒரு பாத்திரமாக இருந்தாலும்கூட, அந்தப் பெண் பிள்ளையை பொட்டை பிள்ளை என்று நான் சொல்கிறபோது, அதனை எப்படியெல்லாம் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்

எனவே, இனிமேல் பாடலில் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது, மிகவும் ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஒவ்வொரு பாடலை எழுதுகிறபோதும் ஒரு பிரசவ வேதனை; அதுபோன்ற கஷ்டமான விஷயம் எதுவு மில்லை என்றெல்லாம் பல மேடைகளில், பல பாடலாசிரியர்கள், பல கவிஞர்கள் சொல்லிக் கொண் டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, நம்முடைய தாய்கள், நம்முடைய சகோதரிகள், நம்முடைய பிள் ளைகள் பாடக்கூடிய விஷயத்தைத்தான் நாங்கள் திரைத் துறையில் பயன்படுத்திக் கொண்டிருக் கிறோம். இங்கே நிறைய இளைஞர்கள் இருக்கிறீர்கள். எல்லோரும் திரைத் துறைக்கு வாருங்கள்.

நீங்களும் மீட்டுத்தாருங்கள்!

இந்தப் பாடலை உள்வாங்கிக்கொண்டு, நமக்கான போராட்டத்தை, நம்முடைய புரட்சிக்கான விடியலை நோக்கிய நம்முடைய பயணத்திற்கான வார்த்தைகளை நீங்களும் மீட்டுத்தாருங்கள் என்று சொல்கிறேன்.

இந்த மேடையில் ஒரு விருது வாங்குவது என்பது – யார் கையால் விருது வாங்குகிறோம் என்பது பெரிய விஷயம் – அதைத்தாண்டி யார் யாரொடெல்லாம் சேர்ந்து விருது வாங்குகிறோம் என்பது அதைவிட பெரிய விஷயமாகும். மிகக் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், தலித் சுப்பையா அவர்கள் விருது வாங்கும் இந்த மேடையில் நானும் விருது வாங்குகிறேன் என்று சொல்வது எனக்கு ஒரு கவுரவமாக இருக்கிறது.

அதேபோன்று முத்துக்குமாரைச் சொல்லவேண்டும். அவர் அடிக்கடி நேரலையில் வருகிறபொழுது, நாள் தோறும் நேரலையில் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், எனக்கு சில சமயம் வெறுப்பு வந்துவிடும். ஏனென்றால், எந்தக் கருத்தை யார் சொன்னாலும், மாற்றிச் சொல்வது, அல்லது மறுத்துச் சொல்வது என்பதற்காகவே விவாதங்கள் நடக்கின்றவோ என்று நினைக்கத் தோன்றுகிற நேரத்தில், முத்துக்குமார் அவர்கள் வருகின்ற போதுதான், அங்கே விவாத நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. எனவே, அவருடைய பணி தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக சிந்தனையோடு, சமூக அக்கறையோடு சில பாடல்களை எழுதவேண்டும்!

அதேபோன்று தாஜ் நூரைப்பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எங்கள் எல்லோருக்குமான ஒரு செல்ல இசையமைப்பாளர். தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே திடீரென்று தொலைப்பேசியில் தொடர்பு கொள்வார். அய்யா நம்மாழ்வாருக்காக ஒரு பாடல் எழுதவேண்டும் என்று சொல்வார்; திடீரென்று வெள்ளம் வந்துவிட்டால், வெள்ளத்திற்கு ஒரு பாடல் எழுதவேண்டும் என்று சொல்வார். எனவே, கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கு மட்டும் பாடல் எழுதவேண்டாம்; அதைத்தாண்டி, சமூக சிந்தனையோடு, சமூக அக்கறையோடு சில பாடல்களை எழுதவேண்டும் என்பதை எங்களுக்கெல்லாம் அடிக்கடி அறிவுறுத்தியிருக்கின்ற தாஜ்நூருக்கும் இந்த மேடையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பொழுதுதான் நமக்குப் பொழுது விடிகிறது!

எனவே, ஆசிரியருடைய உரையைக் கேட்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். என்னுடைய தாயும், தந்தையும், என்னுடைய மனைவி, மகள், என்னுடைய நண்பர்களும் ஆசிரியருடைய உரையைக் கேட்கவிருக்கிறார்கள். சீக்கிரமே நாம் விடைபெற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இப் பொழுதுதான் நமக்குப் பொழுது விடிகிறது. ஏனென்றால், ஆசிரியர் உரையாற்றவிருக்கிறார் என்று சொல்லி என் னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!
– இவ்வாறு பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் உரையாற்றினார்.

 

Leave a Response