நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகளில் பாடங்களை நடத்தும்போதே மாணவர்களை தயார் செய்யலாம் என ஆளுநர் தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்.
எனவே என்னிடம் அதிகாரம் இருந்தால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என ஆளுநர் ரவி பிடிவாதமாக கூறினார்.
இதற்கு, பெற்றோர் நேருக்கு நேர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் இல்லாமலேயே தமிழ்நாடு மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவதாக ஆளுநருக்கு பெற்றோர் நேருக்கு நேர் பதில் கொடுத்தனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தாலே தேர்ச்சி பெற்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என ஆளுநர் சமாதானம் செய்தார்.
நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீட் தேர்வை நடத்துவதற்கு கடைசி வரை நடவடிக்கை எடுக்கும் நபராக நான் இருப்பேன் என்றும் கூறினார்.
பெற்றோர் எதிர்ப்பால் திணறிய ஆளுநர் ரவிபொதுப்பட்டியளில் இருப்பதால் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை என்னிடம் கொடுத்தால் நான் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என ஆளுநர் மீண்டும் கூறினார்.
அப்போது பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். நீட் இல்லாமலேயே தமிழ்நாடு மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளதால் நீட் தேவையில்லை என பெற்றோர் வலியுறுத்தினர். அனைத்து பெற்றோராலும் நீட் தேர்வு பயிற்சிக்கு செலவு செய்ய முடியாது. நீட் தேர்வு இல்லாமலேயே சாதிக்கலாம் என்பதை தமிழ்நாடு மாணவர்கள் பலமுறை நிரூபித்துள்ளனர் என பதிலடி கொடுத்தனர்.
நீட் விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பெற்றோரை உட்காருங்கள் என மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநரிடம் நீட் விலக்கு மசோதா குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய பெற்றோரிடம் மைக் பறிக்கப்பட்டது.
ஆளுநரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியவரின் பரபரப்பு பேட்டிநீட் தேர்வுக்கு பின்னணியில் ஒரு சதி இருக்கிறது என ஆளுநர் மாளிகையில் கேள்வி எழுப்பிய பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கும் போது ஆளுநர் மட்டும் ஆதரிப்பது ஏன்? – பெற்றோர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் முடியவே முடியாது என்கிறார்; நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.இளம் வயதில் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?.பெற்றோர் கேள்வி15 மணி நேரம் நீட் தேர்வுக்கு படித்ததாக மாணவர் கூறுகிறார்; இளம் வயதில் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?. தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது; இவையெல்லாம் நீட் தேர்வு இல்லாமலேயே உருவானதுதான். நீட் பயிற்சிக்கு எல்லோராலும் ரூ.20 லட்சம் செலவிட முடியுமா என்று ஆளுநருக்கு பெற்றோர் கேள்வி எழுப்பினர.
ஆளுநருக்கு எதிராக ராஜ்பவனிலேயே ஆவேசமாக மாணவியின் தந்தை பேட்டியளித்தார். அரசுப் பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு நீட் தேர்வு காரணம் அல்ல; அரசு வழங்கும் 7.5% இட ஒதுக்கீடே காரணம்.எல்லோராலும் லட்சக்கணக்கில் செலவழிக்க முடியுமா?நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆண்டுக்கு ரூ.4 லட்சம் செலவிட வேண்டி இருக்கிறது. 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நீட் தேர்வுக்கு படித்தால் ரூ.20 லட்சம் செலவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்