ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு – திமுக அதிமுக ஏமாற்றம்

நேற்று நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், 82,021 ஆண் வாக்காளர்களும், 87,907 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 17 பேரும் வாக்களித்துள்ளனர்.

மொத்தமாகப் பதிவான வாக்குகள் 1,69,945.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

தற்போது 8.46 விழுக்காடு கூடுதலாகப் பதிவாகி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி சார்பில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள், தினசரி பரப்புரைக்குப் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்தல் ஆகியனவற்றைக்காக சுமார் நூறு கோடி வரை செலவழித்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல எடப்பாடி அதிமுகவினரும் சுமார் ஐம்திலிருந்து அறுபது கோடி வரை செலவழித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு பெரும் தொகை செலவு செய்தும் 2021 தேர்தலைக் காட்டிலும் எட்டு விழுக்காடு வாக்குகள் மட்டுமே அதிகமாகியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம்.

இரண்டு கட்சிகளும் செலவழித்த பணத்துக்கு சுமார் எண்பத்தைந்திலிருந்து தொண்ணூறு விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கவேண்டும், ஆனால் 75 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது அக்கட்சிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

Leave a Response