பஞ்சாப் மாநில சட்டசபையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பனிவாரிலால் புரோகித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என ஏற்கனவே பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பாக வழங்கி உள்ளது அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் தவறாமல் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், பஞ்சாப் மாநில நிநிநிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதை மாநில ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது மாநில முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இருவரும் அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் ரீதியாக கொள்கைகளில் வித்தியாசப்படுவது வேறு, அதே நேரத்தில் வேலை என்று வரும்போது எந்த வேறுபாடும் காட்டாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து அரசியல் செய்துவரும் மோடி அரசுக்குப் பேரிடி என்கிறார்கள்.