தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.
11ஆம் வகுப்புக்கு பொது தேர்வு மே 9-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
நேற்று நிறைவடைந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும்,
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும்,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும்
வெளியாகவுள்ளது.