அரசியல் சட்டத்திற்கெதிராகச் செயல்படும் ஆளுநர் – அடக்கி வைக்க பழ.நெடுமாறன் கோரிக்கை

தமிழக அரசைப் புறந்தள்ளிவிட்டு ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் ஆகியோரின் கூட்டத்தினை ஆளுநர் உதகமண்டலத்தில் கூட்டியிருக்கிறார். தமிழக முதல்வரோ அல்லது உயர் கல்வித்துறை அமைச்சரோ இக்கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்பதும், தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் தமிழக அரசை அடியோடு புறந்தள்ளிவிட்டு ஆளுநர் இக்கூட்டத்தைக் கூட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் அவருக்கு இத்தகைய அதிகாரங்களை அரசியல் சட்டம் வழங்கவில்லை. அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை முற்றிலுமாகப் பறிப்பதாகும்.

ஆளுநர் கூட்டியுள்ள இக்கூட்டத்தில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்பட யாரும் பங்கேற்கக் கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டிய கடமை உயர்கல்வித்துறை அமைச்சருக்கு உண்டு. அதை அவர் உடனடியாக செய்யவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response