அதிமுக பற்றி மருத்துவர் இராமதாசு விமர்சனம் – ஜி.கே.மணி விளக்கம்

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றே தொடக்குகிறது. உடனடியாக நடக்கவுள்ள இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி’ என்கிற முடிவினை பாமக அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களின் நிர்வாகிகள், தனித்து போட்டியிட விரும்பியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாமக அறிவித்துள்ளது.

இதனால், “கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவில்லை” என்று பாமக தரப்பு அதிமுக மீது விமர்சனம் வைத்ததாகச் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே மணி அளீத்துள்ள விளக்கம்:

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. மேலும், அதிமுக தொடர்பாக எவ்வித விமர்சனத்தையும் மருத்துவர் இராமதாசு முன்வைக்கவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் என்றால் சீக்கிரம் கூட்டணி பேசி முடித்துவிடலாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான நாள் மிகவும் குறைவாக உள்ளதால் தற்காலிகமாக எடுக்கப்பட்ட முடிவுதான் இது. தனித்துப் போட்டியிடும் முடிவால் யாருக்கும் இழப்பு இல்லை இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே மணி விளக்கமளித்துள்ளார்.

Leave a Response