இறங்கிவந்த எடப்பாடி பழனிச்சாமி – ஈரோடு மாவட்ட அதிமுகவில் மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஏராளமான அதிமுகவினர் திமுகவில் இணைந்துவிட்டனர்.இதுவரை இணைந்தவர்கள் போக மேலும் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களும் திமுகவில் இணையும் வாய்ப்புள்ளதென்றும் சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்யும் ஆதிக்கம் தான் ஈரோடு அதிமுக கலகலத்துப்போகக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதனால், மேற்கொண்டு அதிருப்தி அதிமுகவினர் திமுகவை நோக்கிப் போகாமல் தடுப்பதற்காக, இறங்கிவந்த எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் கலந்து பேசியிருக்கிறார்.இருவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, எட்டு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஈரோடு மாவட்டத்தை நான்காகப் பிரித்து இரண்டு சட்டமன்றத்தொகுதிகளுக்கு ஒரு செயலாளர் என்று நியமிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த முடிவின்படி கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.இராமலிங்கம், கே.சி.கருப்பணன், மொடக்குறிச்சி சிவசுப்பிரமணியன் ஆகிய நால்வரும் செயலாளர்களாக நியமிக்கப்படவிருக்கிறார்களாம்.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response