காங்கிரசு போராட்டத்தில் பெரும் கூட்டம் கூடியதன் மர்மம் என்ன?

அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவாகரத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய ஒன்றியம் முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன்பு காங்கிரசுக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சின்னமலையில் திரண்ட காங்கிரசுக் கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கிப் புறப்பட்ட காங்கிரசுக் கட்சியினரை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆளுநரைச் சந்திக்க அனுமதி வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

அந்தப் பேரணி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி…,

உளவு பார்க்க அனுமதித்ததன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையையே மோடி அரசு தகர்த்து விட்டது. இந்தக் குற்றத்திற்காக மோடி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இராணுவ அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பதால் நமது இரகசியம் சீனாவுக்குக் கிடைத்துவிடும். நமது இராணுவ இரகசியங்கள் தெரிந்தால் சீனாவுடன் போர் ஏற்படும்போது நாம் தோற்றுவிடுவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்தப்பேரணியில் பெரிய பெரிய கொடிகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதைப்பார்த்த பலரும் காங்கிரசுக்கட்சிப் போராட்டத்தில் இவ்வளவு கூட்டமா? என்று வியப்புடன் கேட்டுச் சென்றனர்.

வெகுமக்கள் மனதில் மோடி மீது இருக்கும் வெறுப்பின் வெளிப்பாடு தான் இவ்வளவு கூட்டத்துக்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

Leave a Response