ஜூலை 15 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை மக்கள் விரோத மோடிக்கு எதிர்ப்பு

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டிப் போய்க்கொண்டேயிருக்கிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.92க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 31 காசுகள் உயர்ந்து ரூ.102.23,ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.94.39 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டேயிருப்பது இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எல்லாக்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும் ஆனால் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல் விலையை உயர்த்திக் கொண்டேயிருப்பதால் மக்கள் விரோத மோடி அரசு என்று சொல்லி எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Response