சசிகலா விவகாரத்தில் ரஜினி பட நகைச்சுவை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, விடுதலையாகி தமிழகம் வந்துள்ளார்.தற்போது அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.அவரை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாகுறித்த கேள்விக்கு, ‘‘அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. தற்போதுள்ள அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவர் கூறியதன் மீது கருத்துச் சொல்ல இயலாது. ஆனால், கட்சி நிலைப்பாடு அடிப்படையில் சசிகலாவைச் சேர்க்க வாய்ப்பு இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். நானும் அதே கருத்தைத்தான் கூறியுள்ளேன்’’ என்றார்.

இந்தக்கருத்து, ரஜினி படமொன்றில் வரும்,மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை அவருதில்ல என்கிற மாதிரி, கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் அவர்தான் ஆனால் அவர் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருப்பது அரசியல் நகைச்சுவையாக உள்ளது.

Leave a Response