
மக்களாட்சி என்பதற்கு மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று படித்திருப்போம்.
இதில் மக்கள் தான் யாரை ஆள வேண்டும் என தீர்மானிப்பார்கள், மக்களிடமே அதிகாரம் உண்டு என்று எல்லாம் நம்மை ஏமாற்றுவார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முதலில் அதிமுகவில் இருந்து பின்னர் திமுகவிற்கு வந்திருக்கிறார்.
திமுக தொடர்ந்து இங்கு இவருக்கு வாய்ப்பு வழங்கி, சனநாயக நாட்டில், சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து, ஒரு மன்னராட்சியை உருவாக்கிவிட்டார்கள். இவர் தான் 44 வருடங்களாகப் போட்டியிட்டுவருகிறார்.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோருக்குப் பின் இப்போது மு.க.ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறார்.
1977 சாத்தூரில்
1980 சாத்தூரில்
1984 சாத்தூரில்
1991 சாத்தூரில்
1996 சாத்தூரில்
2001 சாத்தூரில்
2006 சாத்தூரில்
2011 அருப்புக்கோட்டையில்,
2016 அருப்புக்கோட்டையில்
தற்போது
2021 தேர்தலிலும் அருப்புக்கோட்டையில் இவர் களம் இறங்குகிறார்.
இதனால்,ஜமீன்தார்கள், பண்ணையார்களுக்கு எதிராக சாதாரண மக்களை அரசியலில் பங்கெடுக்கவைத்த அண்ணா தொடங்கிய கட்சியில்,ஜமீன்தார்களையும், பண்ணையார்களையும் உருவாக்கும் நீங்கள் அண்ணாவின் வழியில் என்று சொல்லலாமா? என்கிற கேள்வி சமூகவலைதளங்களில் அதிகம் தென்படுகிறது.


