கமலுக்கு எதிராகக் களமிறங்கிய கவுதமி – கோவை தெற்கு பரபரப்பு

கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெற்கு தொகுதியில் மாநகராட்சி வார்டு எண் 21 முதல் 47 வரையிலான காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் மற்றும் இதரப் பகுதிகளைச் சேர்ந்த 26 வார்டுகள் இருக்கின்றன.

வணிகம் மற்றும் கல்வி நிலையங்கள் நிறைந்த இப்பகுதிகளில் படித்த இளைஞர்கள், வடமாநிலத்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என பல தரப்பட்ட வாக்காளர்களும் உள்ளனர்.

இத்தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரசு சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் பாசகவைச் சேர்ந்த வானதிசீனிவாசன் போட்டியிடுகிறார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தரப்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப், கமல் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் பாசக சார்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில மாதங்களாகவே அங்கு தங்கி களப்பணி ஆற்றிவந்தார் நடிகை கவுதமி. அத்தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று அறிவிப்பு வந்ததால் மனம் வெறுத்து சென்னை திரும்பினார் கவுதமி.

அவரை, பாசக போட்டியிடும் பல்வேரு தொகுஹ்டிகளுக்கும் பரப்புரை செய்ய அழைத்தார்களாம். எங்கும் வரமாட்டேன் என்று சொன்னவர், இப்போது கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகப் பரபுபுரை செய்ய முடிவுசெய்துள்ளாராம்.

வானதிக்கு ஆதரவு என்பதை விட கமலுக்கு எதிர்ப்பு என்பதே அவருடைய குறிக்கோள். அதற்காகவே தொகுதி முழுக்க பரப்புரை செய்ய முன்வந்துள்ளார் என்று சொல்கிறார்கள்.

இதனால் கமல் தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response