19 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள்

அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தொகுதிகள் முடிவான நிலையில், பாமக 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

1. 58. பென்னாகரம் ஜி.கே.மணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்,தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி.ம.திலகபாமா, பி.காம், பொருளாளர், பா.ம.க

3. 64. கீழ்ப்பென்னாத்தூர் மீ.கா.செல்வக்குமார் எம்.ஏ, மாநில அமைப்புச் செயலாளர்.

4. 33. திருப்போரூர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் பி. எஸ்.சி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்,மாநில துணைப் பொதுச்செயலாளர்.

5. 150. ஜெயங்கொண்டம் – வழக்கறிஞர். கே.பாலு, பி.காம், பி.எல், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்

6. 42. ஆற்காடு – கே.எல். இளவழகன்,சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

7. 50. திருப்பத்தூர் – திரு. டி.கே.ராஜா,சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்,மாநில துணைப் பொதுச்செயலாளர்,

8. 59. தருமபுரி – எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி, மாநில துணைப் பொதுச்செயலாளர்,

9. 88. சேலம் மேற்கு – இரா. அருள் பி.எஸ்.சி,மாநில துணைப் பொதுச்செயலாளர்,

10. 70. செஞ்சி – எம்.பி.எஸ். இராஜேந்திரன்,மாநில துணை அமைப்புச் செயலாளர்

11. 161. மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, எம்.காம்,மாநில துணைப் பொதுச்செயலாளர்

12. 152. விருத்தாசலம் – ஜே.கார்த்திகேயன் எம்.பி.ஏ,மாவட்டச் செயலாளர்

13. 19. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – ஏ.வி.ஏ. கஸ்ஸாலி, மாநில துணைத் தலைவர்

14. 153. நெய்வேலி – கோ.ஜெகன், பி.ஏ,மாவட்ட முன்னாள் செயலாளர்

15. 1. கும்மிடிப்பூண்டி – எம்.பிரகாஷ், மாநில துணைப் பொதுச்செயலாளர்

16. 39. சோளிங்கர் – அ.ம.கிருஷ்ணன்,மாவட்டச் செயலாளர்

17. 164. கீழ்வேளூர் (தனி) – வேத.முகுந்தன், எம்.சி.ஏ,மாநில துணைத் தலைவர்

18. 37. காஞ்சிபுரம் – பெ.மகேஷ்குமார், பி.காம். மாநில இளைஞர் சங்கச் செயலாளர்

19. 71. மைலம் – சி.சிவக்குமார், எம்.ஏ,மாநில துணைப் பொதுச்செயலாளர்

Leave a Response