மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக ஆறு தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மதிமுக எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை அறிவித்துள்ளார்கள்.

அதன்படி, சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், மதுராந்தகம், அரியலூர் ஆகிய 6 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response