திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு கையெழுத்தானது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் நீடித்து வந்த தொகுதி உடன்பாடு இழுபறி முடிவுக்கு வந்தது. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அஅதன்படி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி.

இன்று காலை 11 மணி அளவில் அறிவாலயம் வந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஸ்டாலினுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுவரை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25, மதிமுகவுக்கு 6, விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, முஸ்லிம் லீக் 3, ம ம ம க வுக்கு 2 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Response