பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடக்கம் – முழு அட்டவணை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 – 2021 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 (மே 3) அன்று தொடங்கி 21.05.2021 (மே 21) அன்று முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறும். காலை 10 மணி முதல் 10.10 வரை மாணவர்கள் கேள்வித்தாளை வாசிக்கவும், 10.10 முதல் 10.15 வரை மாணவர்களின் சுயவிவரம் சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை…

மே 3- மொழித்தாள்,
மே 5- ஆங்கிலம்
மே 7: கணினி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்
மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 17- கணிதம், விலங்கியல்
மே19- உயிரியியல் வரலாறு
மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல்

உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவ மாணவிகள் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

Leave a Response