தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு – மீனவர்கள் வயிற்றலடித்த சிங்கள அரசு

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து கருவாடு இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது.

இலங்கையில் தற்போது கருவாடு இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,இராமேஸ்வரத்தில் கருவாடுடன் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கை அரசு விதித்துள்ள தடையால், தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் உயர் ரக கருவாடுகள் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கருவாடு ஏற்றுமதியாளர்கள்,வியாபாரிகள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துறைமுகத்தில் தேங்கியுள்ள கருவாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் இராமேஸ்வரத்தில் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response