
பெங்களூருவிலிருந்து இன்று காலையில் (பிப்ரவரி 8) அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.
அமைச்சர்களின் புகாரால் காவல்துறை தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்ட சசிகலா
தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளிக்கு வரும்போது வேறு காருக்கு மாறினார்.
ஆனாலும் அவருடைய காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்படவில்லை. இதுதொடர்பாக நோட்டிசை காவல்துறையினர் வழங்கினர். அதை சசிகலாவின் வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். அதன்பின்னும் கொடி அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா வேறு காருக்கு மாறியது ஏன்? என்கிற கேள்விக்கு, அந்த கார் தற்போது அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் ஒருவருடைய கார் என்று சொல்லப்படுகிறது.
அதனால் அவருடைய காரில் சசிகலா பயணம் செய்கிறார். இதனால் அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவியலாது என்றும் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.


