தயாநிதிமாறன் மீது கிரிமினல் வழக்கு – ஜி.கே.மணி எச்சரிக்கை

அண்மையில் பொதுநிகழ்வொன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்.

அப்போது அவரிடம், திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்று கேட்டதற்கு,

அத பத்தி எனக்குத் தெரியாதுங்க, அவங்க யார்கிட்ட பேரம் பேசறாங்கன்னு தெரியலை யார் அதிகம் காசு தராங்களோ அவங்களோட போவாங்க ஏன்னா போன முறை 400 கோடி வாங்கினதாக சொல்றாங்க. இந்த முறை 1000 கோடி கேட்கறதா சொல்லறாங்க என்றார்.

அதன்பின், திமுக அதுக்கு தயாரா இருக்குதா? என்று கேட்டதற்கு,
எங்க கிட்ட அவ்ளோ காசு இல்லைங்க, கொள்கை மட்டும் தான் இருக்கு என்று பதிலளித்தார்.

இதனால் பாமகவினர் கோபமடைந்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி பற்றியும், அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாசு குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தயாநிதி மாறனுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் சார்பில் அவரது வழக்கறிஞர் கே. பாலு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

Leave a Response