பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு – தமிழகத்திலும் பட்டாசு வெடிக்கத் தடை வருமா?

காற்று மாசு உயர்வால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

இந்த நிலையில், “நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க வேண்டும். நவம்பர் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இரு மாநகரங்களில் காற்று மாசு அதிகம் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தடை உத்தரவைச் செயல்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Response