கக்கனின் பேத்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஜூலை 1 ஆம் தேதி, தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அப்போது,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

அந்த ராஜேஸ்வரி, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி. அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,

நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன்.

அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையும் கூட.

நாளை நமதாகட்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Leave a Response