
கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி….
அடுத்த ஓராண்டிற்கு மக்களைக் கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை
அரசு அனுமதி பெற்று நடத்தும் சமூக்க் கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு பங்கேற்க அனுமதி இல்லை
இறப்பு போன்ற தூக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை
அடுத்த ஓராண்டிற்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அடுத்த ஓராண்டிற்கு மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
வணிகம் செய்யும் இடங்களில் மக்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.
பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம்
அடுத்த ஓராண்டில் எந்த விதிமான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை.
இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாத்த்தில் ஏராளமானோர் சபரிமலைக்கு மாலை போட்டு அங்கு சென்று வருவர். இவ்வாண்டு அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது.


